புதன், 3 ஆகஸ்ட், 2022

எழுபத்தைந்தாண்டு சுதந்திரம்!

 எழுபத்தைந்தாண்டு சுதந்திரம்!


வல்லூறுகளுக்கு வாய் ஊறுகின்றன.


இந்த ஜனநாயகத்தின்


தசை வேறு எலும்பு வேறாய்


பிய்த்து தின்க.


அவை


நம் தேசப்பிதாவின் நிழல்


நீட்டிய கைத்தடியில்


துப்பாக்கியை 


செருகி வைக்கப்பார்க்கின்றன.


"ஹே ராம்"


பளிங்கிலே செதுக்கப்பட்ட‌


அந்த சொற்களிலே


இன்னும் குருதியின் ஈரத்தில்


மொய்க்கும் ஈக்கள்


யாரை அடையாளப்படுத்துகின்றன?


தேசப்பிதாவையா?


அந்த "ரகுபதி ராகவனையா"?


ராமனைக் கொன்றுவிட்டா


இங்கே


ராமனுக்கு "பாராயணங்கள்"?


_________________________________________________


ருத்ரா