ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2023

முரசொலிகள் அதிர்கின்றன!

 என் இனிய நண்பர்களே!

___________________________________________________22.07.2022


உங்களை உற்று நோக்குவது என்பது உங்கள் உள்ளத்தை சிந்தனையை உள் பொதிந்திருக்கும் உட்கிடக்கையை உரசிப்பார்ப்பது ஆகும்!

அறிவு நுட்பத்தை அதன் உட்பொருளான மூளையை மற்றும் இதயத்தை எல்லாம் ஒன்று திரட்டி

ஒரு பேசுகருவி (மைக்) ஆக்கிக்கொள்ளுங்கள்.


இப்போது நீங்கள் பேசுகிறீர்கள்.


அன்பான மக்களே இப்போது தான் நாம் ஓட்டு போட்டு ஒய்ந்திருக்கிறோம்.நம்மோடு நம் தோள் மீதே அமர்ந்து கொண்டு சண்டித்தனம் செய்யும் அந்த "சிந்து பாத்" கிழவன் அதாவது அந்த கோரோனா நம்மை விட்டு அகன்றபாடில்லை. வாக்குறுதிகளை நிறைவேற்று இல்லாவிட்டால் நாற்காலியை விட்டு ஓடு என்று தொனிக்கும்படியாக வண்டி வண்டியாக வாக்குறுதிகளை சென்ற ஆட்சியில் பாக்கி வைத்துள்ள இப்போதுள்ள எதிர்க்கட்சி முழங்கி வருகின்றனர்.

வாக்குறுதிகள் தானே இதோ அதை செயல் படுத்தப்போகிறோம். அதுவும் ஏற்கனவே ஆதாரபூர்வமாக மேதகு ஆளுநரிடம் உங்கள் மீது கொடுத்த ஊழல் பட்டியலின் மீது

விரைவாய் ஆனால் சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்போகிறோம்.உங்கள் கூட்டணிக்கட்சியினரும் கொடுத்த அதே ஊழல் மலைகள் மீது தான் சட்டம் பாயப்போகிறது.

இப்போது அதை சதி என்றும் அரசியல் காழ்ப்பு என்றும் கூறி திசை மாற்றப்பார்க்கிறீர்கள்.

கடந்த நான்கு வருடங்களாய் இதோ உங்களுக்கு சிறை அதோ உங்களுக்கு தண்டனை என கண்ணாமூச்சி ஆடிய உங்கள் கூட்டணியின்  ஒன்றிய அரசு காட்டிய பாவ்லாக்களும் அதற்கு நீங்கள் காட்டிய விசுவாசமும் ஊர் மறக்குமா? உலகம் மறக்குமா? கொடநாடு என்ற ஒரு குடையை வைத்து ஆட்சி செய்வதாய் காட்டிய பாசாங்குகளில் குடை கந்தலானது தான் மிச்சம்.

அந்த கொட நாட்டின் கொலை மர்மம் இந்தியாவையே நடுங்கவைத்துக்கொண்டிருக்கிறது.அதன் நிழல் உங்கள் மீது தானே விழுந்திருக்கிறது.அது பற்றிய விசாரணையும் எங்கள் முக்கிய தேர்தல் வாக்குறுதிகள் தானே? அதை நிறைவேற்ற நாங்கள் தயார்? அதை எதிர் கொள்ள நீங்கள் தயாரா? கொலை காரர்களின் கொடிய விரல் நகம் உங்களிலிருந்து தானே நீண்டிருப்பதாய் தரவுகள் பறை சாற்றுகின்றன.அதற்கு நீங்கள் ஆடும் புலியாட்டங்கள் எங்களிடம் பலிக்காது...."


இப்போது இப்படித்தான் தான் கோட்டையில் கொடி பறந்து நியாயம் கேட்டு முரசொலிகள் அதிர்கின்றன!


----------------------------------------------------------------------------------------------------------

-ருத்ரா 


ஜெயிலர்

 ஜெயிலர்

--------------------------------------------------------------

ருத்ரா  



ரஜினி 

சூப்பர்ஸ்டார் என்ற செங்கோலை 

நன்றாக தூக்கிக்காட்டி விட்டார்..

வசூல் ஒரு வாரத்துக்குள் 

நானூறு கோடி என்றால் சும்மாவா?

இந்த உலகத்துக்கே

ஒரு மூக்கும் விரலும் மட்டுமே இருக்க்கிறது 

மூக்கில் விரலை வைத்து 

வியந்து கொள்ள.

இயக்குநர்  நெல்சன் திலீப் குமார் 

தனியாக ஒரு இமயத்தையும் சிகரத்தையும் 

படைத்துவிட்டார் 

அதில் ஏறி  கொடி அசைக்கிறார்.

அந்த வெற்றிக்கொடியே "ரஜினி".

படத்திற்கு சிறப்பு முத்திரை எல்லாம் 

எதுவுமே இல்லை

விளிம்புகளை எல்லாம் உடைத்துக்கொண்டு 

வன்முறையின் கோரமுகம் கொப்பளிக்கிறது.

இதற்கு ஒரு அலிபியை 

வில்லன் ஏற்கனவே அரங்கேயேற்றியிருப்பார்.

இப்படித்தான் 

கிருஷ்ணர் வந்து 

சம்பவாமி யுகே யுகே என்பார்.

பாசிபிடித்துப்போன 

இந்த ஒரு வரிக்கதையைத் தான் 

ட்ரேக் ரிக்கார்டு ஆக்கி 

சினிமாக்களும் ஆட்சிகளும் 

சாதி மத

ரோடு ரோலர்களை வைத்துக்கொண்டு 

மனிதப்புழுக்களை 

கூழாக்கியிருக்கின்றன.

சத்தியாஜித் ரே என்ற ஒரு மானிடவெளிச்சம் 

காமிராவுக்குள் இருந்த 

இருட்டுக்குடலை உருவி 

மின்னல் தெறிப்புகளாய் ஆக்கி 

ஒரு சரித்திரம் தந்தாரே 

அதெல்லாம் எங்கே போனது?

சரி போகட்டும்.

இந்த நானூறு கோடிகளுக்கு 

நாமும் வைப்போம் ஒரு சல்யூட்.


------------------------------------------------------------------------