வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

சுதந்திரதின சொற்பொழிவு



சுதந்திரதின சொற்பொழிவு


மக்களின் அடையாளக்குரலாக சுதந்திரதின சொற்பொழிவு ஆற்றிய பெருமதிப்புக்குரிய நம் குடியரசு தலைவருக்கு மதிப்பு கலந்த நன்றிகள்.வருடாவருடம் குரல் ஒன்று தான்.ஒலிபெருக்கி தான் வேறு வேறு.இந்த தடவை சிவாஜி வந்திருக்கிறார் குதிரை இல்லாமல்.ஜியா வரிகளும் மக்கள் பிரதிபலிப்புகளும் தொட்டுக்காட்டப்பட்டிருக்கின்றன. வரலாற்றின் வெளிச்சம் காட்டப்படவேண்டியது மிகவும் அவசியம் தான்.கி.மு ஐயாயிரம் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே இருந்த நம் இந்திய நாகரிகத்தின் நாபிக்கொடியே சிந்துவெளித்தமிழனின் சீரிய சித்தாந்தங்கள் தான்.அந்த தமிழ் இனத்தின் லட்சம் பிணங்கள் இலங்கையில் மண்ணுக்கடியில் அதர்மமாய் அழிந்து போனதன் வரலாற்று வெளிச்சத்தின் நீதிக்குரலையும் இந்த சுதந்திரக்குரல் எதிரொலித்துக்கொண்டிருக்கிறது.தமிழ் மொழியும் இனமும் உலகத்தொன்மையின் அடையாளங்கள்.அவையும் பாதுகாக்கப்பட வேண்டும். அந்த நம்பிக்கையின் கனபரிமாணம் இந்த சொற்பொழிவுக்குள் விரவிக்கிடக்கவேண்டும் என்றும் ஒரு நம்பிக்கை இங்கே படர்ந்து கொண்டிருக்கிறது.
வாழ்க நம் ஜனநாயகம்.வாழ்க நம் சுதந்திரம்.

இது மாமூல் வாழ்த்துதான்.இதற்கு மாமூல் பாராட்டுகளும் மாமூல் நன்றியும்
மக்களிடமிருந்து உரித்தாகட்டும்.ஒருவித "மாமூல்" தேசத்தில் மூழ்கிப்போன இந்த மாமூல் கொடியேற்றத்திற்கு விறைப்புடன் மாமூல்தனமாக ஒரு சல்யூட்டோடு முடிந்து போவதல்ல இந்த சுதந்திர தினம்.இத்தனை ஆண்டுகளாக சுமந்து கொண்டிருக்கிறோமே!இது சுமையா?சுகமா?ஜலியன் வாலா பாக்கை பார்த்தவர்கள் அர்த்தம் புரிந்து கொண்டார்கள்."ஜிகர்தண்டா"வை பார்த்துக்கொண்டிருப்பவர்கள் அர்த்தம் இழந்ததை புரிந்துகொண்டிருக்கிறார்கள்.வாழ்க!வாழ்க!நீடூழி வாழ்க நம் சுதந்திரம்.


=======================================ருத்ரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக