புதன், 20 ஜூலை, 2022

நாட்டு நடப்பு...

 நாட்டு நடப்பு....

__________________________________________

ருத்ரா




என்ன தான் செய்வது?

நாட்டு நடப்புகளில்

பீதியும் ஏறுகிறது.

பீபியும் ஏறுகிறது.

முப்பது நாப்பது 

வருடங்களுக்கும்

நாங்களே தான் 

என்கிறார்கள்.

இந்த கணிப்பொறிகள்

கூட‌

ஓட்டை ஒடசல் 

ஈயம் பித்தாளைக்கு

பேரிச்சம் பழம் தானா?

நல்லாத்தான் இயங்குதுன்னு

சொல்லும்போதே

எத்தனை பட்டன் தட்டினாலும்

ஒரே பூவத்தான் காட்டுதுன்னு

சொல்றாங்களே.

இதத் தான் இன்னும்

ஒரே தேசம் ஒரே மொழின்னு

சொல்றாங்களோ.

சில மாநிலங்களிலே

தலைகீழால்ல ரிசல்ட் காட்டுது.

அங்கெல்லாம் 

அப்படியே விட்டாத்தானே

இங்கே மாத்தறத‌

ஒண்ணும் சொல்லமாட்டங்க.

நமக்கு வேண்டிய எண்ணிக்கையை

இங்கேயே எடுத்துக்கிட்டு

புனித வேடம் போட்டுக்கிடலாமே.

என்னமோ போங்க.

நாட்டு நடப்பு புரியலைங்க.

திங்கற சோத்துல‌

வரிவந்து தொண்டையப்பிடிக்குது.

பெட்ரோல் வெல ஏறிகிட்டே போகுது.

பொறுத்துக்கிடுங்க

நாளைக்கு மாட்டு மூத்திரத்திலே

பெட்ரோல் வருதுன்னு கூட‌

சொல்வாங்க.

எதுத்து ஏதும் முனங்கினா

தேசவிரோதம்னு சொல்ற‌

மசோதாக்களை

மடியில நெறைய வச்சுகிட்டு

நாடாளுமன்றத்துக்குள்ள வர்ராங்க.

திரும்பி போரப்ப 

அத்தனையும் சட்டம் தான்.

எல்லா மதத்துக்கும் இடம்கொடுக்கிற‌

அரசியல் சட்டம் இனி தேவையில்லை.

இந்து தர்மம் இருக்கும்போது

மத்த கர்மமெல்லாம் எதுக்குன்னு

தலைமைக்காவி

ருத்திராட்சத்தை உருட்டி உருட்டி

உறுமுதாம்.

என்ன பண்றதுங்க...

நாட்டு நடப்பு வெளங்கலே.

வெளக்க ஏத்து.

தாம்பாளத்தை தட்டுங்க்றாங்க...

"நாட்டு நடப்பு......."

சொல்லி முடிக்கிறத்துக்குள்ளே

புல் டோசர் வந்து

கூழாக்கிட்டு போய்ட்டுது.


_____________________________________





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக